சாக்கடையை சந்தனமாக்கும்
சட்டென்று சகதியில் தள்ளும்
சிலுவை காயங்களை உண்டாக்கும்
சாத்தான்களை சாத்தியமாக்கும்
விரட்டிச்செல்ல வாழ்க்கை சொல்லும்
விதியை தன்வசம் கொள்ளும்
விருந்து உண்ண வழிவகுக்கும்
விகாரங்கள் கண் முன் காட்டும்
தடுப்பணை கொள்ளாது.....
தாழ்ச்சி கொள்ளாது....
கண் அசைவு நேரத்தில் கை மாறும்
காத்த பெருமை உன்னையே சாறும்
வாழ்க்கையே புரட்டிப்போடும்
வாழ்ந்த கதை கண் முன் சொல்லும்
தேடுதல் என்றும் உன்னிலே
தேடும் பாதை கண்ணிலே
கூட கூட குன்றாய் சேரும்
கால நேரம் கணக்காய் உணர்த்தும்
காமெல்லாம் உன் புகழ் ஓங்கும்.
No comments:
Post a Comment