கடை வீதி பொம்மைகள்
கூடையடியில் கொலுவீற்றன
கருத்தாகி கசிந்துருகி
வழிப்பட்டோம்
உயிரற்ற உருவங்கள்
உச்சியில் வைத்தோம்
மனிதர்களும் கடைப்பொம்மையாய்
வேடிக்கை பார்க்கின்றனர்
வேற்றுமை காட்டுகின்றனர்
உணர்ச்சியற்ற உருவங்களாய்
வலம் வருகின்ற மனிதர்கள்
கடைப்பொம்மைகளும் கடவுளாகும்
மனிதர்களும் கடைப்பொம்மையாவார்கள்.
No comments:
Post a Comment