இயற்கையும் பொறாமை கொள்ளும்
இயல்பாய் உன்னிடம் வரும்.
மாபெரும் சக்தியாவும் மாற்றம் பெரும்
மடு மனை எல்லாம் திறந்து வரும்.
தீ சுவாலையும் திகைப்பு பெரும்
தீண்டிய இடமெல்லாம் மோட்சம்
பெரும்.
சுதந்தரம் உன்னில் சுகம் பெரும்
சுட்டிய திசையில் தொடர்ந்து வரும்.
காட்டாற்று வெள்ளம் காத்து
நிற்கும்
கண்ணசைவில் உன் வழி வரும்.
காலமும் நேரமும் உன்னை
தொடரும்
அனுமதி கேட்டு எங்கும் நிற்கும்.
காற்றும் கடன் பெரும்
வீசும் திசையில் உன்னைச்சேரும்.
சுருங்கச்சொல்ல வார்த்தையில்லை
சர்வசக்தி நீயே மாபெரும் எல்லை.
No comments:
Post a Comment