கருவறையில் கருவாக
தவழுகையில் தரிசனமாக
நடக்ககையில் நாட்டியமாக
படுக்கையில் பாதையாக
பாடுகையில் பண்பட்டு
பேசுகையில் பேரண்டமாக
எழுதுகையில் ஏகாந்தமாக
கேட்டலில் கருப்பொருளாக
பார்க்கையில் பரம்பொருளாக
மனிதனில் மனஉறுதி மார்க்கமாக
தன்னம்பிக்கையே தழைக்கின்றது.
No comments:
Post a Comment