Followers

Thursday, 14 January 2021

அறுவடைத்திருநாள்











அறுவடைத்திருநாள் 
அகிலம் போற்றும்  நன்னாள் 
பருவத்தே  பயிர்  செய்ய 
பக்குவமாய்  நாற்றிட்டு 
திங்கள்  காலத்தில் 
தீர்வு காண
மாரிச்செல்வத்தை எதிர்பார்த்து 
ஏறுபூட்டி  உழுது 
ஏத்தம்  இட்டு 
உழுதவன்  உயிராய் நினைத்து 
காத்திருக்க.... 

பசும்புல்  பட்டாடைய் 
பாந்தமாய்   தெரிய 
பதமாய்  பயிர்  வளர்ந்து 
ஓங்கி  நிற்கும் நெற்பயிர்கள் 
ஒவ்வொன்றாய்  உறுதி  செய்யும் 
உழவனின்  ஊதியத்தை... 

ஒற்றுமையாய் கூடி  நின்று 
குடும்பமாய்  மகிழ்ந்திட 
தைத்திருநாளில்  இன்பம்  பெருகி 
ஆதவனைக்  கும்பிட்டு 
அண்டம் பசியாற 
படியளக்கும்  பொன்னாள் 
எங்கள்  வாழ்வின்  திருநாள். 

பொங்கல்  திருநாள்  வாழ்த்துக்கள் 




































Wednesday, 11 November 2020

வாழ்க்கை களம்


சிறுநதி ஓடை
பசும்புற்  பாதை 
காரிருள்  வனத்திலே 
கடும்பனி  நேரத்திலே 
ஆதவன் கிழக்கிலே 
திசை காட்ட  வந்தது 
வாழ்க்கை களம் என்றது 
வாழ்ந்து  பார்க்க  சொன்னது.

செங்மாங்கனி  மரத்திலே 
சுவை திரள்  கனிகள் 
பசியாற்றுமோ.... 
சுவையீட்டு கூட்ட  சொல்லிசை 
பாட்டில்  இல்லையோ.... 
சுவைத்து  மகிழ்ந்தேன் 
வாழ்க்கை கையிலோ..... 




Monday, 9 November 2020

வேடதாரிகள்


பரம்பொருளிடம்  வழி கேட்டால் 
பசும்புல்லும்  பாதை  வகுக்கும் 
கற்சிலை  கண்ணில்  வந்து 
கதை  ஆட்டம்  சொல்கிறது 
வேடம்  இட்ட  மனிதர்கள் 
இனம்  காண  இன்னுயிர் பெருகிறது 
வேதம்  சொல்லும்  பாடம்  என்ன 
வகை  காணும்  மொழி  என்ன 
வார்த்தை  கோர  வரம்புயில்லை 
மனிதர்கள்  போடும்  நாடக  மேடை 
மதியூகம்  மாற்றம்  காணும் 
வேடதாரிகள்  வாழ்க்கை  சொல்லும் 
நயவஞ்சக  பேச்சிலே 
அநாகரிக  போக்கிலே 
நலிந்த மக்கள் வாழ்க்கை  எங்கு  செல்லும்....... 
வேடதாரிகள்  விதி  என்றால் 
மதி  சொல்லும்  மார்க்கம் 
புதிய  பாதை  காணும். 




Friday, 16 October 2020

காகிதத்தாள்



சாக்கடையை  சந்தனமாக்கும் 
சட்டென்று  சகதியில்  தள்ளும் 
சிலுவை காயங்களை  உண்டாக்கும் 
சாத்தான்களை  சாத்தியமாக்கும் 
விரட்டிச்செல்ல  வாழ்க்கை  சொல்லும் 
விதியை  தன்வசம்  கொள்ளும் 
விருந்து  உண்ண  வழிவகுக்கும் 
விகாரங்கள்  கண்  முன்  காட்டும் 
தடுப்பணை  கொள்ளாது..... 
தாழ்ச்சி  கொள்ளாது....
கண்  அசைவு  நேரத்தில்  கை  மாறும்
காத்த  பெருமை  உன்னையே  சாறும் 
வாழ்க்கையே  புரட்டிப்போடும் 
வாழ்ந்த  கதை கண் முன் சொல்லும் 
தேடுதல் என்றும்  உன்னிலே 
தேடும் பாதை கண்ணிலே 
கூட கூட  குன்றாய்  சேரும் 
கால நேரம் கணக்காய் உணர்த்தும் 
காமெல்லாம் உன் புகழ் ஓங்கும்.




 

Thursday, 15 October 2020

தன்னம்பிக்கை ஓளி





கருவறையில்  கருவாக 
தவழுகையில்  தரிசனமாக 
நடக்ககையில்  நாட்டியமாக 
படுக்கையில் பாதையாக 
பாடுகையில்  பண்பட்டு 
பேசுகையில்  பேரண்டமாக 
எழுதுகையில்  ஏகாந்தமாக 
கேட்டலில்  கருப்பொருளாக 
பார்க்கையில்  பரம்பொருளாக 
மனிதனில்  மனஉறுதி  மார்க்கமாக 
தன்னம்பிக்கையே  தழைக்கின்றது.

Wednesday, 14 October 2020

கடைப்பொம்மைகள்



கடை வீதி  பொம்மைகள் 
   கூடையடியில்  கொலுவீற்றன 
கருத்தாகி  கசிந்துருகி 
   வழிப்பட்டோம்  
உயிரற்ற   உருவங்கள் 
    உச்சியில்  வைத்தோம் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாய் 
    வேடிக்கை  பார்க்கின்றனர் 
வேற்றுமை  காட்டுகின்றனர் 
    உணர்ச்சியற்ற  உருவங்களாய் 
வலம்  வருகின்ற  மனிதர்கள் 
 கடைப்பொம்மைகளும் கடவுளாகும் 
மனிதர்களும்  கடைப்பொம்மையாவார்கள். 

Tuesday, 13 October 2020

பூமித்தாய்


       பெற்றத்தாய்  கருவறை 
                சிலமாதகாலம் 
         பெறாததாய்   கருவறை 
                எங்கள்  வாழ்நாள்  காலம்.

         படிப்படியாக  பண்பட்ட  நெஞ்சத்தை 
    உன்னில்  படிக்க  வைத்தாய் 
    பல்லுயிர்கள்  பசியாற 
    பாரம்  சுமந்தாள்.

    ஏறு  போல்  ஏற்றம்  தந்து 
    ஏணியானாள் 
     அன்னை  போல்  சீற்றம் (நிலநடுக்கம் )
        கொண்டு  பின்  அரவணைக்கிறாள்.

    ஆணிவேராய்   நின்று 
       அகிலம்   ஆள்கிறாள் 
     அளப்பரியா  தொண்டினை 
       நித்தம்  செய்கிறாள்.

      அனுஷணமும்   நில்லாது 
          தன்னை  சுற்றுகிறாள் 
     தாயே!  சற்றே  உறக்கம்  கொள் 
          நின்னையே   சரண்ணடைய 
                 தவம்  கொள்கிறேன்.