அறுவடைத்திருநாள்
அகிலம் போற்றும் நன்னாள்
பருவத்தே பயிர் செய்ய
பக்குவமாய் நாற்றிட்டு
திங்கள் காலத்தில்
தீர்வு காண
மாரிச்செல்வத்தை எதிர்பார்த்து
ஏறுபூட்டி உழுது
ஏத்தம் இட்டு
உழுதவன் உயிராய் நினைத்து
காத்திருக்க....
பசும்புல் பட்டாடைய்
பாந்தமாய் தெரிய
பதமாய் பயிர் வளர்ந்து
ஓங்கி நிற்கும் நெற்பயிர்கள்
ஒவ்வொன்றாய் உறுதி செய்யும்
உழவனின் ஊதியத்தை...
ஒற்றுமையாய் கூடி நின்று
குடும்பமாய் மகிழ்ந்திட
தைத்திருநாளில் இன்பம் பெருகி
ஆதவனைக் கும்பிட்டு
அண்டம் பசியாற
படியளக்கும் பொன்னாள்
எங்கள் வாழ்வின் திருநாள்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment